ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 14 வாடிக்கையாளரின் 250 சவரன் நகையை கையாடல் செய்த வங்கி கிளை மேலாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தாசப்பகவுண்டன்புதூர் பகுதியில் செயல்பட்டுவரும் இவ்வங்கியில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.
இங்கு நடைபெற்ற தணிக்கையில், பல நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது . தகவலறிந்து வங்கி முன் குவிந்த வாடிக்கையாளர்கள், நகைகள் மீட்டுத்தரப்படும் என உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.