விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதிகளில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை சப்ளை செய்ததாக மருந்து விற்பனை பிரதிநிதியான விஜயகுமார் மற்றும் தினேஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் இருவரையும் விசாரித்ததில் திண்டிவனம் பகுதிகளில் போதை மருந்து மற்றும் ஊசிகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்தது தெரியவந்ததாக கூறப்பட்டுள்ளது.
அவர்களிடமிருந்து போதை ஊசிகள் மற்றும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.