திருவள்ளூர் மாவட்டம் பொரியபாளையம் அருகே இரு சிறுவர்களை பாம்பு கடித்ததில், அண்ணன் உயிரிழந்த நிலையில், தம்பி ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
ஆரணியை சேர்ந்த கூலி தொழிலாளி பாபுவின் மகன்கள், ரமேஷ் மற்றும் தேவராஜ், அரசு பள்ளியில் படித்து வந்தனர். நேற்றிரவு தங்களின் குடிசை வீட்டில் தூங்கி கொண்டிருந்த இரு சிறுவர்களையும் கட்டு விரியன் பாம்பு கடித்துள்ளது.
சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், ரமேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, தேவராஜிக்கு தீவிர சிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.