தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் நவராத்திரி நிறைவுநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் 9-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மன் சிவபூசை திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி அசுரர் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் உற்சவ அம்பாள் பராசக்தி அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளினார்..
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் உற்சவர் சரஸ்வதி தேவி அம்பாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மகிஷாசூரனை அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டி கட்டபொம்மன் நினைவு கோட்டையில் நவராத்திரி விழாவினை முன்னிட்டு பெண்களின் கொலுஆட்டம், கோலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நவராத்திரியின் நிறைவு நாளான நேற்று இரவு துர்கா அலங்காரத்தில் பல்வேறு சிவாலயங்களில் இருந்து புறப்பட்ட சுவாமிகள் கும்பகோணம் ரயில் நிலையம் அருகே சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.