தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பூ வியாபாரியை வெட்டிப் படுகொலை செய்த மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மஞ்ச நம்பிகிணறு கிராமத்தைச் சேர்ந்த அழகுதுரை என்பவர் பூக்களை கொள்முதல் செய்து பூ மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கும் வேலை செய்து வந்துள்ளார்.
நேற்றிரவு அழகுதுரை வீட்டில் இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.