தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நாளை மகிஷாசுர சம்ஹாரம் நடைபெற உள்ள நிலையில் இன்று தசரா திருவிழா கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன.
கடந்த மாதம் 26ஆம் தேதி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், பல்வேறு வேடமிட்டு விரதமிருக்கும் தசரா குழுவினர், சுற்று வட்டாரங்களில் நடனமாடி காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.
மகிஷாசுர சம்ஹார நிகழ்ச்சியைக் காண ஏராளமான பக்தர்கள் குலசேகரப்பட்டினம் நோக்கி குவிந்து வருகின்றனர்.