சென்னை குரோம்பேட்டையை அடுத்த ஜமீன் இராயப்பேட்டையில் கணவன்-மனைவி கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிசி டிவி காட்சிகளை வைத்து 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கணவனை இழந்த மூத்த மகள் வசந்தியுடன் ஒன்றாக வசித்து வந்த ஆறுமுகம்-மஞ்சுளா தம்பதியினர், வசந்தியின் தகாத நடவடிக்கைகள் பிடிக்காமல் தனியாக மற்றொரு வீட்டில் குடியேறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த இளைய மகள் அம்மு சிட்லபாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
கொலை நிகழ்ந்த வீட்டின் அருகே உள்ள சிசி டிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஆந்திராவில் பதுங்கியிருந்த கொலையாளிகள் இருவரையும் கைது செய்தனர்.
அந்த சிசி டிவி காட்சிகளில், பகலில் மூத்த பெண் வசந்தி தனது பெற்றோர் வசிக்கும் வீட்டை ஒரு நபருக்கு அடையாளம் காட்டுவதும், பின்னர் இரவில் கொலையாளிகள் ஆறுமுகத்தையும் அவரது மனைவி மஞ்சுளாவையும் கொலை செய்து விட்டு தப்பிச்செல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இதன் மூலம் வசந்தியின் கள்ள காதலன் மோசஸ் மற்றும் அவனது அண்ணன் மகன் ஆனந்த் ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.