கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பேரக்குழந்தையை காப்பாற்ற முயன்ற போது அறுந்து கிடந்த மின்கம்பி மீது தவறி விழுந்த மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கொல்லப்பட்டியை சேர்ந்த தீர்த்தகிரி என்பவரது நிலத்தின் வழியாக சென்ற மின்கம்பி நேற்று அறுந்து விழுந்த நிலையில், இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களிடம் தகவல் அளிக்கப்பட்டது.
இருப்பினும் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த ஈஸ்வரி, துணி துவைப்பதற்காக தீர்த்தகிரியின் நிலத்திற்கு அருகேயுள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்ற போது அவரது பேரன் மின் கம்பி அருகே சென்றதால் குழந்தையை காப்பாற்ற முயன்றபோது கால் இடறி மின்கம்பி மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.