தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே துணியில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்த பச்சிளம் குழந்தையை பொது மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நடைபெற்று வரும் நிலையில் ஏராளமான மக்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் கோவிலில் இருந்து கடற்கரை செல்லும் வழியில் சாலையோரத்தில், கிடந்த குழந்தை அழுகுரல் கேட்டு, மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. போலீசார் குழந்தையை விட்டுச் சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.