திருவண்ணாமலை மாவட்டத்தில் பேனர் மற்றும் விளம்பர பதாகைகளால் பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் நேர்ந்தால், சம்மந்தபட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும், அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பேனர், போஸ்டர், விளம்பர பதாகைகள் வைப்பதை வரன்முறைப்படுத்துவதற்காக அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், 2 நாட்களுக்குள் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பேனர் மற்றும் போஸ்டர்களை அகற்ற உத்தரவிடப்பட்டது.