ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 60 சதவீதத்திற்கும் குறைவான குழாய் இணைப்புகள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில், 55 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்கிய தமிழகத்திற்கு முதல் பரிசு கிடைத்தது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான விருதினை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடமிருந்து மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக் கொண்டார்.