கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சோதனை சாவடியில் 28 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, சுங்க சாவடி தொழிலாளர்கள் நடத்திவரும் உள்ளிருப்பு போராட்டம் 3 வது நாளாக இன்றும் நீடிக்கிறது.
இதனால், சென்னை-திருச்சி நான்கு வழி சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்கசாவடியில் கட்டணமின்றி செல்கின்றன.
தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தினால், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, புதுச்சேரியில் இன்று உதவி தொழிலாளர் நல ஆணையர் தலைமையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.