விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சருடன் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரேவதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தான், அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் நிதி ஒதுக்கீடு செய்யாமல் கட்சிப் பாகுபாடு காட்டுவதாக அமைச்சரிடம் அவர் வாக்குவாதம்
செய்த நிலையில், இது கிராம சபைக் கூட்டம் என்பதால் அரசியல் பேச வேண்டாம் எனக்கூறிய அமைச்சர், பெண்ணை அமர வைத்தார்.
இதைத் தொடர்ந்து 100 நாள் வேலை திட்ட முறைகேடு, குடிநீர் பிரச்சனை என அடுக்கடுக்கான கேள்விகளுடன் பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், ஆதிச்சனூர் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமெனக் கூறிவிட்டு அமைச்சர் சென்றுவிட்டதாக மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.