ஈரோட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட ஆவின் பால் பண்ணை செயற்பணியாளர் மற்றும் ஆவின் பாலக துணை மேலாளர் ஆகிய இருவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு பரிந்துரைத்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், நடப்பு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 200 முதல் 250 கோடி ரூபாய் வரை இனிப்புகள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள ஆவின் கால்நடை தீவன தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.