சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பூ ஏற்றி வந்த மூன்று சக்கர ஆட்டோமீது லாரி மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
பூசாரிப்பட்டிலிருந்து குமாரபாளையத்திற்கு மூன்று சக்கர ஆட்டோவில் மயில்சாமி என்பவர் பூ ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.
பச்சம்பாளையத்தில் சென்ற போது பின்னால் வந்த சரக்கு லாரி ஒன்று ஆட்டோ மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் மயில்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடன் சென்ற பூ வியாபாரி செல்வராணி பலத்த காயங்களுடன் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.