பெங்களூருவிற்கு தப்பிச் செல்ல முயன்றதாக யூடியூபர் டி.டி.எப். வாசனை கைது செய்த கோவை மாவட்டம் சூலூர் போலீசார், விசாரணைக்கு பிறகு பிணையில் விடுவித்தனர்.
யூடியூபர் ஜி.பி. முத்துவுடன் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் சென்றதாக டி.டி.எப்.வாசன் மீது சூலூர் மற்றும் போத்தனூர் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டன.
ஏற்கனவே, போத்தனூரில் பதியப்பட்ட வழக்கிற்காக அவர் ஜாமீன் பெற்ற நிலையில், சூலூரில் பதியப்பட்ட வழக்கிற்காக டி.டி.எப். வாசன் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருக்கு தப்பிச் செல்ல முயன்ற அவரை, தென்னம்பாளையம் அருகே வாகன சோதனையின் போது மடக்கி பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.