தமிழகத்தில் விரைவில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தேலி அறிவித்துள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரிய நகரங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கப்படும் என்றும், அடுத்தடுத்த கட்டங்களில் அனைத்து வீடுகளுக்கும் விநியோகிக்கப்படும் என்றும் கூறினார்.
குழாய் வாயிலாக எரிவாயு விநியோகிக்கப்படும் போது அதன் விலையும் குறைய வாய்ப்புள்ளதாக ராமேஸ்வர் தேலி குறிப்பிட்டார்.