தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருள்களை வழங்கியதாக கூறி அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு, மீண்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
கடந்தாண்டு 3.75 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட ஆறு நிறுவனங்களில், அருணாச்சலா இன்பெக்ஸ், நேச்சுரல் ஃபுட் கமர்சியல், இண்டெகிரேடட் சர்வீஸ் பாயிண்ட் ஆகிய 3 நிறுவனங்கள் மீண்டும் 4 கோடி லிட்டர் பாமலின் எண்ணெயும், ஒரு லட்சம் டன் பருப்பும் வழங்க ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தரமற்ற பொருட்கள் வழங்கியதில் சுமார் 210 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக அண்ணாமலை கருத்து பதிவிட்டுள்ளார்.