பெண்கள் இலவச பேருந்து சேவை குறித்து எதார்த்தமாக பேசியதை பலர் தவறாகப் புரிந்துகொண்டதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உள்ள பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி இவ்வாறு தெரிவித்தார்.