சேலத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான சினிமா தியேட்டரின் கேண்டினில் உள்ள பாலில் பூச்சிகள் இருந்ததாக ரசிகர்கள் அளித்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ARRS மல்டிபிளக்ஸ் தியேட்டரில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.
கேண்டினில் இருந்த பாலில் பூச்சிகள் மிதந்ததை கண்ட ரசிகர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தியேட்டருக்கு வந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், பூச்சிகள் மிதந்த 5 லிட்டர் பாலை சாக்கடையில் கொட்டினர்.
பின்னர் நிறுவனத்தின் லேபிள் இல்லாமல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த150 லிட்டர் குளிர்பானங்கள், பிஸ்கட் மற்றும் சிப்ஸ் பாக்கெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.