வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே சுமார் 10 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்தனர்.
சின்ன கோவிந்தபாடி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில், சென்னை பதிவெண் கொண்ட காரில் இருந்து, கேரள மாநிலத்தை சேர்ந்த லாரியில் கட்டுகள் ஏற்றப்பட்டுகொண்டிருந்ததை பார்த்த, ரோந்து போலீசார் சோதனை செய்த போது, அது பணம் என தெரிய வந்தது.
அவ்விரண்டு வாகனங்களிலும், 48 பண்டல்களில் இருந்த சுமார் 10 கோடி மதிப்பிலான பணம், லாரி, கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை பிராட்வேயிலிருந்து கேரள மாநிலம் கோழிகோட்டிற்கு பணம் கடத்தப்படவிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.