திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரபல ஜவுளி கடையின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 4 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆடைகளை பொதுமக்கள் முண்டியடித்து வாங்கிச் சென்றனர்.
கடை திறந்தவுடன் அங்கு மலைபோல் குவிக்கப்பட்ட ஆடைகளை பொதுமக்கள் அலசி தேர்வு செய்து ஆர்வமுடன் வாங்கி சென்றனர். 4 ரூபாய்க்கு ஆடை வாங்க ஆசைப்பட்டு வந்தவர்களில் சிலர் தங்களின் விலைஉயர்ந்த கைபேசி, ரொக்க பணம், கைப்பை உள்ளிட்டவற்றை பறி கொடுத்துச் சென்றனர்.