புதுச்சேரியில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக விழுப்புரத்தை சேர்ந்த திமுக கவுன்சிலர் சரணவன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சோரப்பட்டு பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் வீடு கட்டுவதற்காக அதிக அளவில் மணல் கொட்டப்பட்டிருப்பதாக புதுச்சேரி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் சென்றுள்ளது.
இதுகுறித்து திருக்கனூர் போலீசார் விசாரணை செய்ததில், கவுன்சிலர் சரவணன், தனது லாரியில் திருக்கனூர் ஆற்றில் இருந்து தொடர்ச்சியாக சட்டவிரோதமாக மணல் அள்ளி கடத்தியது தெரியவந்தது.
கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.