விருதுநகரில் இருந்து கள்ளிக்குடி நோக்கி சென்ற கார், திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் மீது ஏறி தாறுமாறாக ஓடியதில், எதிரே வந்த பள்ளி பேருந்து மீது மோதி பல அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது
இந்த விபத்தில் காரின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்த நிலையில் காரை ஓட்டி வந்த தனசேகரன் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்
பள்ளி வாகனத்தில் இருந்த 4 மாணவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.