தமிழகம் முழுவதும் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
பாப்புலர் ஃபிரண்ட் அமைப்புக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு 11 நிர்வாகிகளை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்ததை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றது.
பல மாவட்டங்களில் பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுவீச்சுகள் நடந்தது. இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 100 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.