திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே துணை மின் நிலையத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சார காப்பர் ஒயர் திருடிய வழக்கில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
குஞ்சலம் கிராமப் பகுதியில் 110 கிலோ வாட் அளவு கொண்ட துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. கடந்த ஜூலை 25 ந் தேதி அதிகாலையில் நான்கரை டன் மின்சார டிரான்ஸ்பார்மரில் பயன்படுத்தக்கூடிய காப்பர் வயர் மற்றும் உதிரி பாகங்களை மினி லாரியில் வைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை செய்து ஏற்கனவே 2 பேரை கைது செய்துள்ளனர்.