விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலையில் சுவாமி தரிசனத்திற்காக சென்ற 2பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
புரட்டாசி மாத மஹாலய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோவையைச் சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த நாகராஜன் ஆகியோர் மலைப் பகுதிக்குள் மலையேறி சென்றனர்.
அப்போது அவர்களுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம் வந்ததால் இந்த உயிர் இழப்பானது நடந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.