அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கோரி புதுமண ஜோடி தஞ்சமடைந்தது.
உடையார்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான இளந்தமிழனும், கல்லூரி மாணவி மகேஸ்வரியும் 2 ஆண்டாக காதலித்து வந்தனர். கோயிலில் வைத்து திருமணம் செய்த 2 பேரும், காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
2 பேரின் பெற்றோரை அழைத்து விசாரித்தபோது, இளந்தமிழன் படிக்காதவர் என்பதாலும், போதிய வசதி இல்லாதவர் என்பதாலும் மகேஸ்வரியின் பெற்றோர் ஏற்க மறுத்தனர். இதையடுத்து புதுமண ஜோடிக்கு அறிவுரை கூறி, மணமகன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.