சேலம், திண்டுக்கலில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வீடு, கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் அம்மாப்பேட்டையில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராஜன் என்பவர் வீட்டின் மீது இன்று அதிகாலை மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது தொடர்பாக மாவட்ட எஸ்.டி.பி.ஐ. தலைவர் சையது அலி மற்றும் அவரது உறவினர் காதர் உசேன் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், திண்டுக்கல் அடுத்த குடைபாறைபட்டியை சேர்ந்த பா.ஜ.க.வின் மேற்கு மாநகரத் தலைவர் செந்தில் பால்ராஜின் கார், 5 இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த வழக்கில் சிக்கந்தர் கைது செய்யப்பட்டார்.