உடுமலை அருகே விடுமுறை எடுத்த பள்ளி மாணவியை பிரம்பால் அடித்த தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாளவாடி கிராமத்தைச் சேர்ந்த கோகிலா என்பவரின் மகள் நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவி ஸ்லோ லேர்னிங் வகுப்பிற்கு வராததால் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கையில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் புகார் அளித்ததையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.