சரக்கு லாரியின் என்ஜீனுக்குள் பதுங்கிய நாகப் பாம்பு ஒன்றை போராட்டி மீட்ட காட்சி வெளியாகி உள்ளது.
கடலூர் முதுநகர் பகுதியில் பிரபல துணிக்கடையின் குடோன் உள்ளது. இந்த குடோனுக்கு துணிகளை ஏற்றி வந்த லாரிக்குள் ஐந்தடி நீள நாகப்பாம்பு ஒன்று புகுந்தது
லாரியின் இன்ஜின் பகுதிக்குள் பதுங்கிக் கொண்ட பாம்பு குறித்து பாம்புபிடி வீரர் செல்லாவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. செல்லா வந்து இன்ஜின் பகுதியில் பதுங்கி இருந்த பாம்பை கண்டுபிடித்து வெளியே இழுத்தார்.
ஆனால் தப்பிக்க எண்ணிய பாம்பு உள்ளே சென்று சிக்கிக் கொண்டு படம் எடுத்து ஆடியது. நீண்ட நேர முயற்சிக்கு பின்னர் பாம்பிற்க்கு எந்த காயமுமின்றி செல்லா அதனை மீட்டார்.
தரையில் விட்டபோது படம் எடுத்து ஆடிய பாம்பை செல்போனால் படம் பிடித்து விட்டு அதனை பத்திரமாக காப்பு காட்டில் விட்டார்..
அதே போல சீர்காழி அடுத்த சிங்கம்மேடு பகுதியில் ஒரு வீட்டிற்குள் புகுந்த கோதுமை நாகம் முட்டையை அடைகாத்துக் கொண்டிருந்த கோழியை கொன்று விட்டு முட்டைகளை விழுங்கதயாரான போது சிக்கிக் கொண்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் பாண்டியன் , சீற்றத்துடன் காணப்பட்ட அந்த பாம்பை பிடித்து வெளியே கொண்டு சென்றார்.
அரியவகை பாம்பாக கருதப்படும் இந்த கோதுமை நாகப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.