திருத்துறைப்பூண்டி அருகே ஊராட்சிமன்ற முன்னாள் பணித்தள பெண் பொறுப்பாளரை ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து தாக்கும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
மணலி ஊராட்சிமன்ற தலைவராக இருக்கும் சுமத்ரா என்பவருக்கும், ஊராட்சிமன்ற பணித்தள பொறுப்பாளராக பணியாற்றிவந்த செம்மலர் என்பவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து சமீபத்தில் அப்பொறுப்பில் இருந்து செம்மலர் நீக்கப்பட்டார்.
சில தினங்களுக்கு முன்பு தங்களைப் பற்றி அவதூறு பரப்புவதாக ஊராட்சிமன்ற தலைவர் தரப்பிலும், செம்மலர் தரப்பிலும் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசி போலீசார் அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் ஊராட்சிமன்ற தலைவர் சுமத்ரா தலைமையில் செம்மலரின் தையல் கடைக்கு சென்ற பத்திற்கும் மேற்பட்டோர், அவரை சரமாரியாக தாக்கினர்.
இதுதொடர்பாக சுமத்ரா, அவரது கணவர் மற்றும் மகன்கள் உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.