சென்னையை அடுத்த மணலியில் சினிமா பட விநியோகஸ்தரிடம் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மணலியைச் சேர்ந்த பியாரிலால் குந்தச்சாவிடம் சைதாப்பேட்டை இடைத்தரகர் குமார் மற்றும் வடபழனி சினிமா விநியோகஸ்தர் பால்குமார் ஆகியோர் தங்களின் புதிய படத்தினை ரிலீஸ் செய்வதற்கு 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் சொன்னபடி படம் ரிலீஸ் செய்யாததால் அவர்கள் மீது மணலி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து ராஜேந்திரகுமாரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள பால் குமாரை தேடி வருகின்றனர்.