பத்மநாபபுரம் அரண்மனையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க வந்த கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை அரண்மனைக்குள் கேரள போலீசார் அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசுவாமி, மற்றும் அரண்மனை கட்டுப்பாட்டில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி சுவாமி விக்ரகங்கள் உடைவாள் மாற்றி பாரம்பரிய முறைப்படி, இரு மாநில போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் திருவனந்தபுரத்திற்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 2 மாநில அமைச்சர்களும் பங்கேற்ற நிலையில் ஆட்சியர் மா.அரவிந்த்தை தடுத்து நிறுத்தி கதவுகளை முடியதாகவும், பின்னர் தமிழக அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில், சம்பந்தப்பட்ட போலீசார் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது.