கோவையில் கல்லூரி நிர்வாகத்திடம் சீட் கேட்டு மிரட்டிய போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் ராமகிருஷ்ணாநகரைச் சேர்ந்த முகமது அல் அமீன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு கோவை ஜி.ஆர்.டி. கல்லூரியை தொடர்பு கொண்டு தாம் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், கல்லூரியில் தனக்கு தெரிந்தவர்களை சேர்க்க சீட் தரவேண்டும் என்று மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த கல்லூரி நிர்வாகம் கோவை மாநகர காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் அவர் போலி என்பது தெரிய வந்தை அடுத்து திருப்பூரில் பதுங்கி இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டார்.