மதுரையில் கிரிப்டோ கரன்சி விவகாரத்தில் நண்பனை கத்தி முனையில் கடத்திய நண்பர்களில் 3 பேரை கைது செய்த போலீசார், மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
கோரிப்பாளையம் தனியார் விடுதியில் கல்லூரி மாணவர் ஒருவரை மூன்று பேர் கத்தி முனையில் கடத்திச் சென்றதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவம் நடைபெற்ற விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர்.
அலங்காநல்லூரை சேர்ந்த அருணன், கடந்த ஆண்டு கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்தபோது, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் 40 ஆயிரத்துக்கு வாரந்தோறும் 2,000 ரூபாய் வட்டி கிடைக்குமென ஆசைவார்த்தை கூறியதால் அவரது நண்பர்கள் சிலர் இணைந்து 16 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
முதலீடு செய்த நிறுவனம் மூடப்பட்டதால் ஆத்திரமடைந்த நண்பர்கள் அரவிந்த் குமார் உட்பட 5 பேர் கொண்ட கும்பல், பணத்தை கேட்டு மிரட்டி கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.