சென்னை-கொல்லம் விரைவு ரயில், சிவகாசி, திருத்தங்கல் நிலையங்களில் நின்று செல்ல வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணிக்கம் தாகூர் எம்பி, சு. வெங்கடேசன் எம்பி உள்ளிட்ட 350க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசி நகர அனைத்து அரசியல் கட்சியினர், பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளிட்டவை சார்பில், சிவகாசி ரயில் நிலையத்தில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.