வெளிநாட்டு மாடலிங் ப்ராஜெக்டிற்கு இந்திய மாடல் தேவைப்படுவதாக கூறி பெண்ணிடம் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பெற்று, மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், லண்டனில் மாடலிங் ப்ராஜெக்டிற்கு ஆள் தேவைபடுவதாக கூறி தனது செல்போன் வாட்ஸ்அப் மூலம் வந்த மெசேஜ் நம்பி தனது புகைப்படங்களை அனுப்பியதாகவும், அதனை பெற்றுக் கொண்டு 3 லட்ச ரூபாய் பணம் கேட்டு மர்மநபர் மிரட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வாட்ஸ்அப் மொபைல் எண்களின் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்து திருப்பூரைச் சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞரை கைது செய்தனர்.