காமெடி நடிகர் போன்டா மணி, 2 சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது மேல் சிகிச்சைக்கு உதவும்படியும் சக நடிகர் பெஞ்சமின் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
இலங்கையை சேர்ந்த போன்டா மணி, இயக்குநர் பாக்யராஜ் இயக்கிய பவுனு பவுனு தான் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் வடிவேலுவுடன் பல படங்களில் சேர்ந்து நடித்து காமெடியில் கலக்கினார்.
இந்நிலையில் பெஞ்சமின் வெளியிட்டுள்ள வீடியோவில், முதலமைச்சர் உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.