தமிழகத்தில் பருவமழை காலத்தில் பரவும் காய்ச்சல் தான் பரவி வருகிறது என்பதால், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாமென மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை அடுத்த கோளப்பஞ்சேரியில் சிறப்பு காய்ச்சல் முகாமை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், செங்கல்பட்டு சூனாம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்த விவகாரத்தில் பணி நேரத்தில் இல்லாத மருத்துவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.