கோவை அருகே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழி, சரியாக மூடாத காரணத்தால், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சிக்கிக் கொண்டன.
இடையர்பாளையம் பி என் புதூர் டிவிஎஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த சாலை முழுவதும் குழி தோண்டி குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இன்று காலை அவ்வழியே வந்த பயணிகள் பேருந்தின் சக்கரங்கள் குழிக்குள் சிக்கி கொண்டன. அடுத்து வந்த ஒரு ஜீப்பின் சக்கரங்களும் சிக்கியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.