தூத்துக்குடியில் தொடர் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திருடனை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார், 126 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
சாத்தான்குளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிந்த போலீசார், அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அந்த வாகனத்தில் பூட்டை உடைக்க பயன்படுத்தும் ஸ்குரு ட்ரைவர், கட்டிங் பிளேயர், 2 பிளாஸ்டிக் கவர் நிறைய தங்க நகைகள் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர்.
கட்டாரி மங்கலத்தை சேர்ந்த கொடிமலர் என்பதும் சாத்தான்குளம், நாசரேத், திருச்செந்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.