கோவையில் ஐ.பி.எல் மற்றும் ஆன் லைன் சூதாட்டத்தில் இழந்த பணத்துக்காக 2 கிலோ தங்கத்துடன் தலைமறைவான நகை பட்டறை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் சுஜித் , கோவையில் தங்கிருந்து பலரிடம் தங்கக் கட்டிகளை பெற்று நகைகள் செய்து கொடுத்து வந்தார்.
சூதாட்டத்தில் பணத்தை இழந்த அவர் வாடிக்கையாளர்கள் கொடுத்த 2 கிலோ தங்கத்துடன் தலைமறைவானார். இந்த நிலையில் டெல்லியில் இருந்து கோவை வருவதை செல்போன் சிக்னல் மூலம் உறுதி செய்த போலீசார், கோவை ரயில் நிலையத்தில் வைத்து சுஜித்தை கைது செய்தனர்.