தமிழகத்தில் பரவி வரும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பாதிப்பினால் மருத்துவமனைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 4 பேருக்கு ஸ்வைன் ஃப்ளு, 9 பேருக்கு கொரோனா, 6 பேருக்கு டெங்கு வைரஸ் என கண்டறியப்பட்ட நிலையில் 30 பேர் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மொத்தம் 50 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், காய்ச்சலுக்கு மட்டும் 100 படுக்கைகளுடன் வார்டு தயாராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையிலும் மக்கள் குவிந்துள்ள நிலையில், புற நோயாளிகள் பிரிவில் பெரியவர்கள் 145 பேரும், குழந்தைகள் 131 பேரும், உள் நோயாளிகள் பிரிவில் பெரியவர்கள் 44 பேரும், குழந்தைகள் 132 பேரும் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.