ஈரோடு அம்மாபேட்டை அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில், தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்தார்.
குருசாமி - சரண்யா தம்பதியின் இளைய மகன் அபினேஷ், அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய அபினேஷ், வீட்டுக்கு அருகே உள்ள காலிமனையில் தோண்டப்பட்ட குழிகளில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.
அப்போது மழை நீர் தேங்கியிருந்த ஒரு குழியில் குதித்த சிறுவன், மேலே ஏற முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தான். இரவு 8 மணி ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடிய போது, சிறுவன் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.