இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட மீனவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மேலும், காரைக்காலைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை சிறையில் இருந்து விடுவிக்க முயற்சிகள் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அண்ணாமலை நன்றி தெரிவித்தார்.