சேலம் அருகே கலப்படம் செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீரகம், சோம்பு ஆகியவற்றை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சந்தைப்பேட்டை பிஜி ரோடு பகுதியில் கிரித்குமார் ராமன் லால் என்பவருடைய குடோனில் உணவு பாதுகாப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
8 ஆயிரத்து 250கிலோ சீரகம், 4ஆயிரத்து 180கிலோ சோம்பு, அதில் கலப்படம் செய்வதற்கு பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த வேதி பொருட்கள், செயற்கை வண்ண நிறமிகள்,மாவுப் பொருட்கள், உலர்த்த வைக்கப்பட்டிருந்த விசிறிகள்,எடை இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.