இந்துமதம் தொடர்பாக பெரியார் பேசியதையே தான் பேசியதாகக் கூறியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, இதற்காக ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் நிகழ்ச்சியில் பேசிய அவர், தாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்றும் இந்து மதத்தின் பெயரால் கூறப்படும் சனாதனத்திற்கு எதிரானவர்கள் என்றும் குறிப்பிட்டார்.