கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட வேப்பூர் தாலுகா சுற்றுவட்டாரபகுதிகளில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் அதிக அளவில் காணப்படுவதால் விவசாயிகள் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா மற்றும் மங்களூர் மற்றும நல்லூர் ஒன்றியங்களில் இந்த ஆண்டு 22,000 ஏக்கர்பரப்பில் விவசாயிகள் மானாவாரிசாகுபடியாக மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.
மக்காச்சோளம் விதைத்து 20 நாட்கள் முதல் 30 நாட்கள் ஆன நிலையில் ஒருஅடி உயரம் வளர்ந்துள்ள மக்காச்சோள பயிர்களில் படைப்புழுவின் தாக்குதலால் பயிரின் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனைஅடைந்துள்ளனர்
எந்த பூச்சிக் கொல்லிமருந்தை வாங்குவது என தெரியாமல் நாள்தோறும் மருந்தை வாங்குவதும் தெளிப்பதுமாக உள்ளனர். எத்தனை முறை மருந்து தெளித்தாலும் படைப்புழுவை கட்டுப்படுத்த முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் மக்காச்சோளபயிர்களை பாதுகாக்க ஊடுப்பயிராக ஆமணக்கு, துவரை, உள்ளிட்டவைகளை பயிரிட்டு இருந்தனர். அதனையும் மீறி தற்பொழுது மக்காச்சோள பயிர்களை படைபுழுகள் தாக்கி அழித்துவருவதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்துவருகின்றனர்
ஆண்டுதோறும் இந்த படைப்புழு தாக்கத்தால் விவசாயிகள் வேதனை அடைவதும் ஏக்கர் ஒன்றுக்கு சராசரியாக 15 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
வேளாண்துறை அதிகாரிகள் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளை வழங்கி மக்காச்சோளபயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து துணைவேளாண் இயக்குனரிடம் கேட்டதற்கு எந்தவகையான மருந்து தெளிப்பது என்பதை கிராமம் கிராமமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக
விளக்கம் அளித்தார்.