திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எடைப்பணித் தொழிலாளர்கள் லஞ்சம் வாங்குவதாக தொடர்பான வீடியோவை ரகசியமாக எடுத்து விவசாயி ஒருவர் வெளியிட்டுள்ளார்.
சாரம், ஒலக்கூர், நெய்குப்பி, விளங்கம்பாடி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த தானிய வகைகளை இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
அவர்களிடம் விவசாயிகளின் மூட்டையிலிருந்து, ஒழுங்குமுறை விற்பனைக்கூட மூட்டைக்கு மாற்றவும், எடை போடுவதற்கும் மூட்டை ஒன்றுக்கு தலா 30 ரூபாய் லஞ்சம் வாங்குவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
வீடியோவை பார்வையிட்ட பலரும், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.